கொரோனா  வைரஸின்  தாக்கத்தினால் உலக மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் முடங்கியவாறு காணப்படுகின்றனர். இவ்வேளையில் மக்கள் தமது தொழில் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை  மேற்கொள்ள இணையத்தின் உதவியை நாடுகின்றனர்.




இதற்காக பல இணையதளங்களையும் செயலிகளையும் நாடுகின்றனர்.
இவற்றில் zoom எனும் செயலி  கானொளிக்கருத்தரங்கு மற்றும் கல்வி சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் பிரசித்தமானது. இது பல்லாயிரக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படுகின்றது.




இந்நிலையில் ஹேக்கர்கள்  இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி
சுமார் 500,000 இற்கு  அதிகமான zoom கணக்குகளை ஹேக் செய்து dark web  இல் பல இலட்சங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
ஹேக் செய்யப்பட்ட   கணக்குகளின் தகவல்கள் அம்பலப்படுத்தப்படும் என்று மிரட்டப்பட்டு கப்பம் கோரப்படுகின்றது.
பயனர்களின் தகவல்கள் கசியச்செய்தது தொடர்பாக இச்செயலி பல வழக்குகளை எதிர்கொள்கிறது.




பல முதன்மை நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை இச்ச்செயலியை பயன்படுத்த தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

NOTE  :  ஏதும் திருத்தங்கள் இருப்பின் COMMENT  இல் பதிவிடவும்.